/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுாரில் 116 மி.மீ., மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளம்
/
பில்லுாரில் 116 மி.மீ., மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளம்
பில்லுாரில் 116 மி.மீ., மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளம்
பில்லுாரில் 116 மி.மீ., மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளம்
ADDED : நவ 05, 2024 06:15 AM

கோவை; கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லுார் அணை பகுதியில், 116 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையில், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை இருந்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. நேற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது. சித்திரைசாவடி தடுப்பணை, ஆத்துப்பாலம் சங்கிலி கருப்பன் தடுப்பணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சிறுவாணி அணை பகுதியிலும் மழைப்பொழிவு இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 30 மி.மீ., மழை, அணைப்பகுதியில், 24 மி.மீ., மழை பதிவாகியது. அணையின் நீர்மட்டம், 44.41 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 9.81 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு: பெரிய நாயக்கன்பாளையம் - 22.80, மேட்டுப்பாளையம் - 38, பில்லுார் அணை - 116, அன்னுார் - 9.40, தொண்டாமுத்துார் - 22, போத்தனுார் - 14.20, பொள்ளாச்சி - 11, மாக்கினாம்பட்டி - 7, வால்பாறை - 17, சோலையாறு - 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

