/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடக்கழிவு மேலாண்மைக்கு ஊராட்சிகளுக்கு 12 வாகனங்கள்
/
திடக்கழிவு மேலாண்மைக்கு ஊராட்சிகளுக்கு 12 வாகனங்கள்
திடக்கழிவு மேலாண்மைக்கு ஊராட்சிகளுக்கு 12 வாகனங்கள்
திடக்கழிவு மேலாண்மைக்கு ஊராட்சிகளுக்கு 12 வாகனங்கள்
ADDED : ஜூன் 13, 2025 09:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்க, 12 புதிய பேட்டரி வாகனங்கள் வந்துள்ளன.
பொள்ளாச்சியில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் இருந்து தினமும் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன.
பொதுமக்களிடம் இருந்து குப்பை பெற, பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட வாகனங்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டன. இந்நிலையில், தற்போது புதிதாக பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தேவையான பேட்டரி வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் ஊராட்சிகளில், குப்பை சேகரிக்கும் பணிக்கு இந்த வாகனங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், தூய்மை பாரத திட்டத்தின் கீழ், மத்திய அரசின், 70 சதவீதம், மாநில அரசின் 30 சதவீதம் நிதியை கொண்டு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.
தேவைப்படும் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஊராட்சிகளுக்கு வழங்கும் வகையில் மொத்தம், 12 பேட்டரி வாகனங்கள் வந்துள்ளன. விரைவில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.