/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் 12வது ஆண்டு விழா
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் 12வது ஆண்டு விழா
ADDED : ஜன 20, 2025 11:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், 12வது ஆண்டு விழா நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி தங்கமணி வரவேற்றார். பள்ளி இயக்குநர் அரசு பெரியசாமி, ஆண்டறிக்கையை வாசித்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்று, குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு, நாளிதழ் வாசிப்பதன் நன்மை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பேசினார்.
அவருக்கு, பள்ளிச் செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகி மகேஸ்வரி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவ-, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முடிவில், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சத்யவதி நன்றி கூறினார்.

