/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
/
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 04, 2025 01:02 AM
கோவை; கண்ணம்பாளையம், கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின், 12வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாக கலையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் தமிழக காவல்துறை இயக்குனர் ரவி ஐ.பி.எஸ்., மற்றும் ஆட்டோடெஸ்க் பிரெய்டு நெட்ஒர்க் நிறுவனத்தின், ஆசியா பசிபிக் கண்டங்களுக்கான பொறுப்பாளர் கிருஷ்ண சதுர்வேதி கலந்துகொண்டு, 15 துறைகளைச் சேர்ந்த 715 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
ரவி ஐ.பி.எஸ்., பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் இன்று பெற்றுள்ள பட்டத்தில், உங்களின் பெற்றோரின் தியாகம் இருப்பதை மறவாதீர்கள். நீங்கள் பெற்ற கல்வி அறிவை கொண்டு சமுதாயப் பிரச்னைகளுக்கு உதவுமாறு, பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களை உருவாக்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து, முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், அனைத்து துறை டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.