/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் 12வது விளையாட்டு விழா
/
எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் 12வது விளையாட்டு விழா
ADDED : ஆக 12, 2025 08:07 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் எஸ்.எஸ்.வி.எம், விதான் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ தலைவி லக்சிகா ஜாஸ்மின் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக கார்கில் வீரர் கர்னல் ஜாய்குப்தா தாஸ் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசுகையில், 'ஒருங்கிணைந்த சமுதாய வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. நாட்டுப்பற்று என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளுணர்விலும் இருக்கிறது. இருக்க வேண்டும். நாட்டை முன் னேற்ற நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனிமனித ஒழுக்கத்தையும், தனிமனித முன்னேற்றத்தையும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்,' என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் மண்டலம் மற்றும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒருங்கிணைந்த கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், முதல்வர் ராதிகா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.