/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் வரும் 12ல் விஜயதசமி விழா
/
ஏ.ஆர்.பி., பள்ளியில் வரும் 12ல் விஜயதசமி விழா
ADDED : அக் 09, 2024 10:21 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஜமீன் முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், வரும், 12ம் தேதி விஜயதசமி விழா நடக்கிறது. நிகழ்ச்சியானது காலை, 10:30 மணிக்கு துவங்க உள்ளது.
ஏ.ஆர்.பி., பள்ளியில் புதிதாக சேர உள்ள மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் முன்னிலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சியும், மாணவர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற உள்ளது.
விழாவை சிறப்பித்து தலைமை ஏற்று நடத்த பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம், பொருளாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, பள்ளி முதல்வர் பெரியசாமி பங்கேற்க உள்ளனர். இதில், அனைவரும் தவறாமல் பங்கேற்று சரஸ்வதி தேவியின் ஆசி பெற்று கல்வியில் சிறந்து விளங்குமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

