ADDED : மே 18, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் பதுங்கியுள்ள வங்கதேசத்தினரை கண்டறிய, போலீசார் சோதனையை துவக்கியுள்ளனர். பீளமேடு போலீசார், வீரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில், நேற்று சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகப்படும் வகையில் இருந்த சிலரிடம் விசாரித்தனர். அவர்களது மொபைல் போன் அழைப்புகள், ஆவணங்களை பரிசோதித்தபோது, வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்திருப்பது தெரியவந்தது.
வங்கதேசம், ஹம்துல்லாவை சேர்ந்த பப்லு, 26, உட்பட 13 பேரை கைது செய்தனர். இவர்கள் கோவைக்கு எப்படி வந்தனர் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.