UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை அருகே, நரிக்கல்பதியில், 13 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.
ஆனைமலை அருகே நரிக்கல்பதி கன்னியம்மன் கோவில் அருகே, விவசாயி ராமசாமி வழக்கம் போல நேற்று காலை தோட்டத்தில் கோழிகளை திறந்து விட சென்றார். அப்போது, அங்கு மலைப்பாம்பு, கோழிகளை விழுங்கு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற வனத்துறையினர், கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பினை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் மலைபாம்பு, தாய்க்கோழி மற்றும் நான்கு கோழி குஞ்சுகளை விழுங்கியதை துப்பியது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, 13 அடி நீளம் உள்ள மலைபாம்பினை பிடித்து, சாக்குப்பையில் கட்டி, ஆழியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
