UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடிநீர் அபிவிருத்தி பணிகள் (சிப்பம் 2) பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு நீருந்து நிலையத்தில், புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு இடையூறாக உள்ள 300 மி.மீ., விட்டமுள்ள ‘சிஐ’ குடிநீர் பம்பிங் மெயின் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கவுள்ளது.
இதற்காக, நாளை (7ம் தேதி) முதல், நாளை மறுநாள் (8ம் தேதி) என, இரண்டு நாட்கள் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, பொதமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்க காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
