/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பூப்பந்தாட்ட 'சாம்பியன்ஷிப்' ஜூனியர் பிரிவில் 13 வீரர்கள் தேர்வு

ADDED : நவ 24, 2024 11:50 PM
கோவை; கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில 'சாம்பியன்ஷிப்' போட்டிக்கான ஜூனியர் அணி தேர்வில், 42 வீரர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு, 69வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும், 30, டிச., 1ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கென, கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில், அணி வீரர்கள் தேர்வு நேற்று நடந்தது.
நேரு ஸ்டேடியம் எதிரே கோவை மாநகராட்சி மைதானத்தில் காலை, 7:30 மணி முதல் தேர்வுத்திறன் போட்டிகள் நடந்தன. இதில், 42 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பித்து பங்கேற்றனர்.
போட்டித் திறன் அடிப்படையில் ஜூனியர் பிரிவில், 13 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து முகாம் வாயிலாக, 10 பேர் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, கழக பொது செயலாளர் மார்ஷல் தெரிவித்தார்.