/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 சவரன் தங்க நகை, ரொக்கம் திருட்டு
/
13 சவரன் தங்க நகை, ரொக்கம் திருட்டு
ADDED : மே 02, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, குனியமுத்தூரிலுள்ள மேட்டுக்காடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினகரன், 40. கடந்த, 30ம் தேதி இரவு, வீட்டின் முதல் மாடியில் தூங்கினார்.
மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு, தூக்கம் கலைந்து எழுந்தவர், டீபாயின் மேல் வைத்திருந்த ரூ. 37 ஆயிரத்து 500-- ஐ காணாமல் திடுக்கிட்டார். கப்போர்டை திறந்தபோது அங்கிருந்த எட்டு சவரன் தங்க செயின்கள், மூன்று சவரன் நெக்லஸ், 12 கிராம் மோதிரங்கள், ஒரு சவரன் கம்மல் என மொத்தம், 13.4 சவரன் தங்க ஆபரணங்கள் திருட்டு போயிருந்தன.
இவரது புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.