/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 ஆக்கிரமிப்பு வீடுகள் 'துாள் துாள்'; பொதுத்தேர்வு முடிந்ததும் மீதி இடிப்பு
/
13 ஆக்கிரமிப்பு வீடுகள் 'துாள் துாள்'; பொதுத்தேர்வு முடிந்ததும் மீதி இடிப்பு
13 ஆக்கிரமிப்பு வீடுகள் 'துாள் துாள்'; பொதுத்தேர்வு முடிந்ததும் மீதி இடிப்பு
13 ஆக்கிரமிப்பு வீடுகள் 'துாள் துாள்'; பொதுத்தேர்வு முடிந்ததும் மீதி இடிப்பு
ADDED : மார் 25, 2025 06:24 AM

கோவை; கோவை, கண்ணபிரான் மில்ஸ் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 13 வீடுகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், நேற்று இடித்து அகற்றினர்.
கோவை மாநகராட்சி, 50வது வார்டு, உடையாம்பாளையம் கண்ணபிரான் மில்ஸ் அருகே ராமலிங்கபுரத்தில், 40 அடி சாலையை ஆக்கிரமித்து, ஓட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இங்கு வசித்தவர்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. சிலர் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்தனர்; பலர் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.
இதுதொடர்பாக, 18ம் தேதி நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையில், அலுவலர்கள் களஆய்வு செய்தனர்.
மாற்று வீடு பெற்று விட்டு, காலி செய்யாமல் இருப்பவர்களுக்கு, மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அவர்கள் காலி செய்ததை தொடர்ந்து, நேற்று ஒரே நாளில், 13 வீடுகள் இடிக்கப்பட்டன.
நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'மொத்தம், 30 ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கின்றன. 13 குடும்பத்தினர் காலி செய்ததால், அவ்வீடுகள் இடிக்கப்பட்டன. 9 வீடுகளில் உள்ள குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதுவதால், அவகாசம் கோரியுள்ளனர்.
ஏப்., கடைசி வாரம் அவ்வீடுகள் காலி செய்யப்படும். எட்டு பேருக்கு பட்டா வழங்க வேண்டியிருந்தது. அதில், 4 பேருக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்ததில், 2 பேருக்கு கிடைத்து விட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், விரைவில் அகற்றப்படும்' என்றனர்.