/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு
/
உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு
உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு
உலக நலனுக்காக பட்டீசனுக்கு 1,300 கிலோ மலர் வழிபாடு
ADDED : மே 02, 2025 06:57 AM

தொண்டாமுத்துார் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் பட்டி நாயகர் சைவநெறி அறக்கட்டளை சார்பில், 1,300 கிலோ மலர் கொண்டு, பட்டீசனுக்கு மலர் வழிபாடு நடத்தப்பட்டது.
பேரூர் பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை சார்பில், 30 ஆண்டுகளாக, தமிழ் ஆண்டின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில், உலக நலன் வேண்டி, பட்டீசனுக்கு மலர் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டும், உலக நலன் வேண்டி, மலர் வழிபாடு நேற்று நடந்தது.
கொங்கு வேளாளர் மடத்தில் இருந்து, 1,300 கிலோ எடையுள்ள, மல்லி, செண்பகம், தாமரை, அரளி, பிச்சி, சம்பங்கி, வில்வம், நொச்சி, வன்னி, விளா என, 48 வகையான மலர்கள் மற்றும் இலைகளை, பக்தர்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
அதன்பின், பேரூர் பட்டீஸ்வரருக்கு, அர்த்தசாம பூஜையின்போது, மலர்களை கொண்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஏராளாமான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.