ADDED : செப் 28, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடை மருந்தகங்களில் நேற்று வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, வேடபட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை,, நரசீபுரம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில், நேற்று காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 12 தெரு நாய்கள் உட்பட வீட்டில் வளர்க்கும் 120 நாய்கள் என 132 நாய்களுக்கு, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. அதோடு ரேபிஸ் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
