/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல் டாக்டர் வீட்டில் 136 பவுன் திருட்டு
/
பல் டாக்டர் வீட்டில் 136 பவுன் திருட்டு
ADDED : ஜன 16, 2025 05:51 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பல் டாக்டர் வீட்டில் இருந்து, 136 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி ரத்தினம் நகரை சேர்ந்த பல் டாக்டர் கார்த்திக், 40. இவர், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன், கேரளா மாநிலம் கொச்சினுக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருப்பதாக அருகில் வசிப்போர், டாக்டருக்கு போனில் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு இருந்து வந்த கார்த்திக் மற்றும் குடும்பத்தினர், வீட்டில் பீரோவில் இருந்த, 136 பவுன், மூன்று லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர், மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

