/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரியில் 1,365 பேருக்கு பட்டம்
/
ரத்தினம் கல்லுாரியில் 1,365 பேருக்கு பட்டம்
ADDED : மார் 17, 2025 01:01 AM

கோவை; பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 1,365 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
ரத்தினம் கல்லுாரியின் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் பேசுகையில், ''பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் தொடர் முயற்சி, புதுமையை தோற்றுவித்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வியை கற்றுகொண்டே இருப்பது அவசியம்,'' என்றார்.
கோவை, 'இஒய் ஜிடிஎஸ்' அசோசியேட் இயக்குனர் பிரகதேசன், கோவை டேலன்ட் அக்விசிஷன் இயக்குனர் ராவ் ஆகியோர், 'தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தொழில்சார் திறன் வளர்ச்சி, மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை, தொழில் வாய்ப்புகளை பயன்படுத்துதல்,' குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில், இளநிலை மற்றும் முதுநிலையில் பயின்ற 1,365 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி தேர்வுகள் கட்டுப்பாடு அதிகாரி தினகரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.