/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சக்தி கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா
/
ஸ்ரீ சக்தி கல்லுாரியின் 13வது பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 19, 2024 06:50 AM

கோவை: எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.
காம்காஸ்ட் மையத் தலைவர் மற்றும் பொதுமேலாளர் கண்ணன் சுப்ரமணியம், இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீராம் வாசுதேவன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளை சேர்ந்த, 598 இளங்கலை, 135 முதுகலை பட்டதாரிகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை, கல்லுாரி தலைவர் தங்கவேலு மற்றும் சிறப்பு விருந்தினர் ஸ்ரீராம் வாசுதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த ஆய்வகம், இன்டெல் உடன் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்குவிக்கும் என்று, கல்லுாரி செயலாளர் தீபன் தெரிவித்தார்.
முதல்வர் ரவிக்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.

