/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
/
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
ADDED : நவ 18, 2025 03:38 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா சார்பில், சலங்கை பூஜை விழா நடந்தது.
பொள்ளாச்சி நவரச நாட்டியாலயாவின், 13வது சலங்கை பூஜை விழா, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஆசிரியர் கீதா, இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயபிரியா நாட்டியாஞ்சலி ஆசிரியர் செல்வி செல்வன் பேசினார்.
பஞ்சமூர்த்தி கவுத்துவம், அலாரிப்பு, ஜதீஸ்வரம், போ சம்போ கீர்த்தனை, ஆடாது அசங்காது வா கண்ணா, திருப்புகழ், ஓம் சக்தி, தில்லானா, ஹரிவராசனம் உள்ளிட்ட பாடல்களுக்கு மாணவியர் நடனமாடி அசத்தினர்.
ஒவ்வொரு பாடல்களுக்கேற்ப முகபாவனைகளை வெளிப்படுத்தி மாணவியர் நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. நாட்டியாஞ்சலி மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

