ADDED : ஏப் 11, 2026 05:31 PM
அன்னுார்: மத்திய அமைச்சர் போட்டியிடுவதால், வி.ஐ.பி., அந்தஸ்து பெற்ற அவிநாசி தொகுதியில், 14 பேர் களத்தில் உள்ளனர்.
அவிநாசி தனித் தொகுதியில், 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆறு வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ.,வின் மத்திய இணை அமைச்சர் முருகன், தி.மு.க., சார்பில் கோகிலா மணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோவிந்தன், ஞான சங்கம் சார்பில் ஆறுமுகம், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சின்னச்சாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சுயேச்சைகளாக ஆறுமுகம், ஆனந்தி, கோகிலாமணி, சத்தியராசு, சுப்பிரமணி, தனபால், மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் கோகிலாமணி பெயரில் ஒரு சுயேட்சையும், இதே தொகுதியில், இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற தனபால் பெயரில் ஒரு சுயேட்சையும் போட்டியிடுகின்றனர்.
