UPDATED : நவ 04, 2026 12:47 PM
ADDED : நவ 04, 2026 12:45 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி தொழிலாளர் காலனி மக்கள், சப் – கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில், ‘திப்பம்பட்டி தொழிலாளர் காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் இல்லை. மேலும், இரவில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் குடியிருப்பு பகுதியில் நடந்து செல்ல அச்சமாக உள்ளது.
கடந்த, 14 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
