தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாதி வழியில் நின்ற எலக்ட்ரிக் காருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

பாதி வழியில் நின்ற எலக்ட்ரிக் காருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

பாதி வழியில் நின்ற எலக்ட்ரிக் காருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு


UPDATED : நவ 04, 2026 12:59 PM

ADDED : நவ 04, 2026 12:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:59 PM ADDED : நவ 04, 2026 12:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஒண்டிப்புதுார், செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கோவையிலுள்ள ேஷாரூமில், 2023 மே 26ல், டாடா நெக்ஸான் மின்சார கார் வாங்கி பயன்படுத்தி வந்தார்.

2026, ஜன.19ல் அவரது இல்லத்திலிருந்து 100 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்த காரில் பயணித்தார். பேரூர் அருகே சுமார் 20 கி.மீ. துாரத்தை கடந்து சென்ற போது, பேட்டரி திடீரென 25 சதவீதமாக குறைந்தது.

காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. டாடா இ.வி. செயலி வாயிலாக சார்ஜிங் நிலையத்தை தேடினார். அருகில் சார்ஜிங் நிலையம் இல்லை.

இதனால் சவுரிபாளையத்திலுள்ள டாடா சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். பல முறை முயற்சித்த பிறகு, சர்வீஸ் சென்டரில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு காரை எடுத்து சென்றனர்.

பேட்டரி மாற்றி தருவதாக கூறினர். பல நாட்களாகியும் மாற்றி தராமல் தாமதம் செய்தனர். நீண்டகாலம் சேவை மையத்தில் கார் நிறுத்துப்பட்டதால் அவரால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இழப்பீடு கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், புகார்தாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் , எதிர்மனுதாரர் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us