/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 1400 பேர் செல்ல முடிவு
/
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 1400 பேர் செல்ல முடிவு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 1400 பேர் செல்ல முடிவு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 1400 பேர் செல்ல முடிவு
ADDED : ஜூன் 19, 2025 05:40 AM
மேட்டுப்பாளையம், : மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, 1400 பேர் செல்ல முடிவு செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் முன்னிலை வைத்தார். மேற்கு நகர தலைவர் தேவன் வரவேற்றார். இம்மாதம், 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மேட்டுப்பாளையத்தில் இருந்து, 42 வாகனங்களில், 600 பெண்கள் உட்பட, 1400 பேர் செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நகர நிர்வாகிகள், ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நகர பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
சூலுார்
மதுரையில், நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சூலுார் வட்டார பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அவ்வமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில், நிர்வாகிகள், எம்.எல்.ஏ., கந்தசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று பொதுமக்கள், முருக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.