/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா
/
அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா
ADDED : ஆக 27, 2025 10:50 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குஇடம் கொடுத்தவருக்கு, 141ம் ஆண்டுநினைவு விழா கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியகாரர் ராமகவுடர் என்பவர், 1884ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
அந்த இடத்தில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு இடம் கொடுத்த வரை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம், மருத்துவமனையில் விழா நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த, 25ம் தேதி அரசு மருத்துவமனையில், 141ம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகராஜ் தலைமை வகித்தார். விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
ராமகவுடரின் உறவினர் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.