ADDED : டிச 29, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் 141ம் ஆண்டை முன்னிட்டு, ஸ்தாபன தினம் கொண்டாடப்பட்டது.
காங்., கட்சியினர் 141வது ஆண்டு ஸ்தாபன தினம் அக்காட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
பொள்ளாச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் (காமராஜ் பவன்) கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 141வது ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில், நகரத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

