/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக அரசை கண்டித்து போராட்டம் ஹிந்து இயக்கங்களை சேர்ந்த 145 பேர் கைது
/
தமிழக அரசை கண்டித்து போராட்டம் ஹிந்து இயக்கங்களை சேர்ந்த 145 பேர் கைது
தமிழக அரசை கண்டித்து போராட்டம் ஹிந்து இயக்கங்களை சேர்ந்த 145 பேர் கைது
தமிழக அரசை கண்டித்து போராட்டம் ஹிந்து இயக்கங்களை சேர்ந்த 145 பேர் கைது
ADDED : டிச 08, 2025 05:46 AM

: பொள்ளாச்சி, உடுமலையில் தமிழக அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி உள்ளிட்ட இயங்கங்களை சேர்ந்த, 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலையில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அனுமதிக்காமல் தடை செய்த தமிழக அரசைக்கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர்கள் ஹரி, சசிக்குமார், ஆர்.எஸ்.எஸ்., பொள்ளாச்சி ஜில்லா தலைவர் கோபால், நகர செயலாளர் இளங்கோவன், வி.எச்.பி., மணி சேகரன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, ஹிந்து முன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பைச்சேர்ந்தவர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பேரில், 12 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நிருபர் குழு -

