/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபிராமி கல்வி குழுமத்தின் 14வது பட்டமளிப்பு விழா
/
அபிராமி கல்வி குழுமத்தின் 14வது பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 02, 2025 09:29 AM

போத்தனுார்:
அபிராமி கல்வி குழுமத்தின், 14வது பட்டமளிப்பு விழா, குழும தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் கோவை, ஈச்சனாரி அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''ஒருவர் நோயிலிருந்து விடுபட, மருந்துக்கு இரண்டாமிடமே. மனித நேயமே முக்கியம். குழு செயல்பாடே வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும். சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடக்கூடாது. குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றி நீடிக்காது,'' என்றார்.
பார்மஸி, நர்சிங் உள்ளிட்ட நான்கு துறைகளில் தேர்வு பெற்ற முதுகலை, இளங்கலை மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். 278 பேர் பட்ட சான்றிதழ் பெற்றனர்.
முன்னதாக, அபிராமி கல்வி குழுமம் மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் உமாதேவி வரவேற்றார். டாக்டர் முருகநாதன் வாழ்த்துரையாற்றினார். மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர்கள் குந்தவிதேவி, செந்தில்குமார், பாலமுருகன், சுசரிதா, கல்லூரி டீன் ஜெயபாரதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.