/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற 'கேபிள்' ஒயர்களுக்கு 15 நாள் 'கெடு!' சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
/
அனுமதியற்ற 'கேபிள்' ஒயர்களுக்கு 15 நாள் 'கெடு!' சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
அனுமதியற்ற 'கேபிள்' ஒயர்களுக்கு 15 நாள் 'கெடு!' சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
அனுமதியற்ற 'கேபிள்' ஒயர்களுக்கு 15 நாள் 'கெடு!' சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
ADDED : பிப் 23, 2024 12:20 AM
கோவை:அனுமதியற்ற கேபிள் ஒயர்களை அப்புறப்படுத்தவில்லையேல் அபராதம் விதிப்பதுடன், சட்ட ரீதியான நடவடிக்கையும் பாயும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கோவை மாநகராட்சி, 17 ஆயிரத்து 911 எண்ணிக்கையில், 2,659.67 கி.மீ., நீளம் தார் ரோடு, 3,037 எண்ணிக்கையிலான, 294.05 கி.மீ., நீளம் சிமென்ட் ரோடு, 1,820 எண்ணிக்கையில், 258.87 கி.மீ., மண் ரோடுகளை பராமரித்து வருகிறது.
இந்நிலையில், பாதாள சாக்கடை, குடிநீர், மின் கேபிள்கள், தொலை தொடர்பு கேபிள்கள், எரிவாயு குழாய் பதித்தல் போன்ற பணிகளுக்கு அந்தந்த துறையினர் ரோடுகளை தோண்டுகின்றனர். அதன்பிறகு முறையாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
பாதிப்புகளை தவிர்க்க, முன் அனுமதி பெற்ற பின்னரே ரோடுகளை தோண்ட வேண்டுமென மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், இந்தியன் ஆயில், பி.எஸ்.என்.எல்., சூயஸ் நிறுவனம், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கு கடந்தாண்டு நவ., மாதம் மாநகராட்சி உத்தரவிட்டது.
ரோடுகளின் குறுக்கே, போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கேபிள்களால் குறிப்பாக இரவு நேரங்களில் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, 15 நாட்களுக்குள் அனுமதியற்றவற்றை அப்புறப்படுத்தவில்லையேல் கடும் நடவடிக்கை பாயுமென மாநகராட்சி எச்சரித்துள்ளது.
15 நாட்கள் 'கெடு'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளதாவது:
மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்கு கம்பங்கள், மின் கம்பங்களில் மாநகராட்சி மற்றும் போலீசார் அனுமதியின்றி இணையதள கேபிள், உள்ளூர் தொலைக்காட்சி கேபிள், தொலை தொடர்பு கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், மாநகரின் அழகியல் குறைவதுடன், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. சாலைகளில் குறுக்கிடும் ஒயர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள்களையும், 15 நாட்களுக்குள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லையேல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின்மீது அபராதம் விதிப்பதுடன், போலீசார் வாயிலாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.