/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்று நடவு
/
நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்று நடவு
நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்று நடவு
நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்று நடவு
ADDED : டிச 31, 2024 04:34 AM
தொண்டாமுத்தூர் : இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிகத் தீவிரமாக களத்தில் செயல்பட்டவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நம்மாழ்வாரின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் நம்மாழ்வாரின் நினைவு நாளில், விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறது.
இந்த ஆண்டு நம்மாழ்வாரின் நினைவு நாளான நேற்று, காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில், 570 ஏக்கர் பரப்பளவு கொண்ட, 65 விவசாயிகளின் நிலங்களில், மொத்தம், 1,50,084 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.