ADDED : மே 25, 2026 08:06 AM
அ நிறம் | அளவு
சூலூர்: சூலூர் அடுத்த முத்துக் கவுண்டன் புதூரில் உள்ள ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக கள் வைத்திருப்பதாக நீலம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., பாலகணேஷ் மற்றும் போலீசார் அந்த தோட்டத்தில் சோதனையிட்டனர். அதில், விற்பனைக்காக வைத்திருந்த, 15 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர். விவசாயி மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், ராசிபாளையம் ரோட்டில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
