/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேக்கேஜிங்' அட்டைப் பெட்டி விலை 15 சதவீதம் உயர்வு
/
'பேக்கேஜிங்' அட்டைப் பெட்டி விலை 15 சதவீதம் உயர்வு
'பேக்கேஜிங்' அட்டைப் பெட்டி விலை 15 சதவீதம் உயர்வு
'பேக்கேஜிங்' அட்டைப் பெட்டி விலை 15 சதவீதம் உயர்வு
ADDED : அக் 16, 2024 12:19 AM
கோவை : கிராப்ட் காகிதத்தின் விலை அதிகரித்துள்ளதால், அட்டைப்பெட்டி விலையை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் (சிக்ப்மா) துணைத் தலைவர் கதிர்வேலு கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 200 அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களும் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களும் உள்ளனர். மருந்து, உணவுப்பொருள், மோட்டார், வால்வுகள் என, அனைத்துவிதமான பேக்கிஜிங்களுக்கான அட்டைப்பெட்டியை, அனைத்து அளவுகளிலும் தயாரித்து வருகிறோம்.
அட்டைப்பெட்டி உற்பத்தியில், 100 ஜி.எஸ்.எம்., முதல் 450 ஜி.எஸ்.எம்., வரையிலான காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தலையீடு, மழைக்காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மூலப்பொருளான கிராப்ட் காகிதத்தின் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. சில மாதங்களுக்குள், டன்னுக்கு ரூ.3,000 அதிகரித்துள்ளது.
மின் கட்டண உயர்வும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உற்பத்தி நிறுவனத்தில் 100 டன் அட்டைப்பெட்டி கையாண்டபோது, ரூ.32 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தினோம்.தற்போது, 30 டன் வரைதான் கையாள்கிறோம். ஆனால், மின்கட்டணம் ரூ.42 ஆயிரம் வருகிறது. இதுபோன்ற காரணங்களால், அட்டைப்பெட்டி விலையை, 15 சதவீதம் உயர்த்தியுள்ளோம். தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.