/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி 15 அணிகள் பங்கேற்பு
/
மாவட்ட கால்பந்து போட்டி 15 அணிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 06, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் அருகே அல்லிக்காரம்பாளையத்தில், 'திஷா' சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் 15 அணிகள் பங்கேற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் இதில் விளையாடினர்.
இதில் அம்பாள் சி.பி.எஸ்.இ., பள்ளி, கே.ஜி. பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி, செயின்ட் மேரிஸ் பள்ளி, அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வென்றன. நிகழ்ச்சியில் சிறந்த வீரர், சிறந்த தடுப்பாளர் ஆகியோருக்கும் கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளை ஐ.சி.எஸ்., அகாடமி தலைவர் சரண் வழங்கினார்.