/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
154 அங்கீகாரமற்ற லே-அவுட்டுகளை வரன்முறை செய்து மாநகராட்சி உத்தரவு
/
154 அங்கீகாரமற்ற லே-அவுட்டுகளை வரன்முறை செய்து மாநகராட்சி உத்தரவு
154 அங்கீகாரமற்ற லே-அவுட்டுகளை வரன்முறை செய்து மாநகராட்சி உத்தரவு
154 அங்கீகாரமற்ற லே-அவுட்டுகளை வரன்முறை செய்து மாநகராட்சி உத்தரவு
ADDED : செப் 22, 2024 07:29 AM

கோவை: கோவையில் அங்கீகாரமற்ற, 154 லே-அவுட்டுகளில் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால், நேற்று வரன்முறை செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கான அவகாசம், 2025 பிப்., மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தங்களது மனைகளை வரன்முறை செய்ய, பலரும் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களது விண்ணப்பங்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலகத்துக்கு மாநகராட்சியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அவை பரிசீலிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.
இதையடுத்து, உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூட்டாக, டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் அமர்ந்து, அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து ஒப்புதல் வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தனர்.
இறுதியாக, மத்திய மண்டலம் - 3, கிழக்கு - 35, வடக்கு - 60, மேற்கு - 35, தெற்கு - 21 என, மொத்தம் - 154 லே-அவுட்டுகள் வரன்முறை செய்யப்பட்டு, அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியம் - 9, கிழக்கு - 10, மேற்கு - 7, தெற்கு - 9 என, மொத்தம் 35 லே-அவுட் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன.
வரன்முறை செய்து அனுமதி கொடுக்கப்பட்ட லே-அவுட்களுக்கு எஸ்.பி.எப்., (sold plot frame) எண் வழங்கப்பட்டது.
இந்த லே-அவுட்டுகளில் வீடு கட்டியவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தால், வரன்முறை செய்து வழங்கப்படும்.