/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பீமா ஜூவல்லரியில் 15ம் ஆண்டு விழா சலுகைகள்
/
கோவை பீமா ஜூவல்லரியில் 15ம் ஆண்டு விழா சலுகைகள்
ADDED : ஜன 16, 2025 03:48 AM

கோவை : பீமா ஜூவல்லரி, தனது கோவை கிளையின், 15 வெற்றிகரமான ஆண்டுகளை கோலாகலமாக கொண்டாடுகிறது.
நிர்வாக இயக்குனர் அபிஷேக் பிந்துமாதவ் பேசுகையில், ''பீமா ஜூவல்லரி பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் கலந்து, பலவித ரசனைகளுக்கேற்றவாறு, ஒப்பற்ற நகைகளின் தொகுப்பை வழங்குகிறது. ஆண்டு விழாவையொட்டி கிராஸ்கட் ரோடு கிளையில், வரும் 20ம் தேதி வரை, தங்கம், வைரம், வெள்ளி நகைகளின் தனித்துவ கலெக் ஷனுடன், சிறப்பு விற்பனை நடக்கிறது,'' என்றார்.
சிறப்பு விற்பனையில், தங்க நகைகளின் செய்கூலியில் பிளாட் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைர நகைகளுக்கு காரட் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு செய்கூலியில், பிளாட் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள், ரூ.75 ஆயிரம் அல்லது 10 கிராமுக்கு மேல் பர்ச்சேஸ் செய்தால், நிச்சய பரிசாக தங்க நாணயம் வழங்கப்படுகிறது. கூடுதலாக செலவழிக்கும் ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய்க்கும், ரூ.ஆயிரம் மதிப்புள்ள சில்வர் கிப்ட் பவுச்சர் வழங்கப்படுகிறது.