/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 ஸ்டேஷனில் 16 வழக்குகள்; நகை திருடன் கைது
/
5 ஸ்டேஷனில் 16 வழக்குகள்; நகை திருடன் கைது
ADDED : மார் 18, 2025 11:13 PM

சூலுார்; சூலுார் அருகே, 16 வழக்குகளில் தொடர்புடைய பலே குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கடந்தாண்டு அக்., மாதம், சூலுார் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரி வீட்டில், 10 சவரன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.
நேற்று சூலுாரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அந்நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்நபர், வெள்ளமடையை சேர்ந்த செந்தில்குமார், 54 என்பதும், பெரியநாயக்கன் பாளையம், போத்தனூர், சிங்காநல்லூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், திருட்டு உள்ளிட்ட, 15 வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 10 சவரன் நகையை மீட்டனர்.