/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு பூட்டை உடைத்து 16 சவரன் திருட்டு
/
வீட்டு பூட்டை உடைத்து 16 சவரன் திருட்டு
ADDED : ஜன 02, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா சத்யா பிரியா, 45. சரவணம்பட்டி பூந்தோட்டம் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த டிச., 28ம் தேதி தனது சொந்த ஊருக்கு, குடும்பத்துடன் சென்றிருந்தார்.
அப்போது, கடந்த 30ம் தேதி, பிரியாவின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சுஜாதா, பிரியாவை போனில் அழைத்து, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
பிரியா உடனே கிளம்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த சுமார் 16 சவரன் தங்க நகைகள், ரூ. 28 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.
அவரது புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கினறனர்.