/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவா பாரதி சார்பில் முகாம் 160 பேர் ரத்ததானம்
/
சேவா பாரதி சார்பில் முகாம் 160 பேர் ரத்ததானம்
ADDED : ஜன 07, 2024 09:13 PM

கருமத்தம்பட்டி:சோமனுாரில் சேவா பாரதி சார்பில் நடந்த முகாமில், 160 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
சூலுார் ஒன்றிய சேவா பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தா ரத்த நிலையம் சார்பில், சோமனுாரில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்து பேசினார். சேவா பாரதி கோவை கோட்ட தலைவர் சத்திய நாராயணன், சுரேஷ்குமார், டாக்டர் பாஸ்கர் ராஜா ஆகியோர் ரத்த தானம் குறித்து விளக்கி பேசினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 160 பேரிடம் இருந்து, 160 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ரத்தத்துக்கு மாற்றுப் பொருள் கிடையாது. செயற்கையாகவும் தயாரிக்க முடியாது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும். பலருக்கு ரத்தம் தேவைப் படுகிறது.
ரத்த தானம் செய்வதால், பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன, என, சிறப்பு விருந்தினர்கள் பேசினர். சிவக்குமார், கவிதா பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.