/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.ஏ.டி., விடுதியில் சேர்க்கை 169 கூடைப்பந்து வீரர்கள் பங்கேற்பு

ADDED : மே 21, 2025 12:17 AM

கோவை, ; எஸ்.டி.ஏ.டி., விடுதியில் சேர்க்கைபுரியும் கூடைப்பந்து வீரர்களுக்கான தேர்வில் இரு நாட்களில், 169 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனை புரியும் விதமாக, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், 28 இடங்களில் செயல்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் வாலிபால், கூடைப்பந்து, தடகள போட்டி உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், கூடைப்பந்து வீரர்கள் இவ்விடுதியில் சேர்க்கை புரிவதற்கு மாநில அளவிலான தேர்வு, கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில்,நேற்றுமுன்தினம் துவங்கியது.
நேற்று முன்தினம், 7, 8ம் வகுப்பு மாணவர்கள், 103 பேர் பங்கேற்றனர். நேற்று, 9 ம் வகுப்பு மாணவர்கள், 66 பேர் பங்கேற்றனர்.
வீரர்களின் உடற்தகுதி, தனித்திறமை, முந்தைய சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.