/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேம்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா
/
கேம்போர்டு பள்ளியில் 16வது ஆண்டு விழா
ADDED : நவ 04, 2025 11:57 PM

கோவை: மணியகாரம்பாளையம், தி கேம்போர்டு சர்வதேச பள்ளியில், 16வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை ஆகியோர் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர் பூனம் சியால், பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனரும், ஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான மாணிக்கவாசகம் கலந்து கொண்டார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, உச்சி மாநாட்டில்இந்தியாவிலேயே சிறந்த பள்ளியாக 'தி கேம்போர்டு சர்வதேச பள்ளி' அங்கீகரிக்கப்பட்டதற்காக, பள்ளி நிர்வாகத்தை பாராட்டி கவுரவித்தார்.
விழாவில், 2024 ---25 கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.

