/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூவருக்கு அரிவாள் வெட்டு 17 வயது சிறுவன் கைது
/
மூவருக்கு அரிவாள் வெட்டு 17 வயது சிறுவன் கைது
ADDED : அக் 21, 2025 10:09 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன், பிரசாந்த் மீது மோதினார். இதையடுத்து, பிரசாந்த் அச்சிறுவனை கண்டித்தார்.
அவருடன் சேர்ந்து சிலரும் கண்டித்தனர். அப்போது அந்த 17 வயது சிறுவன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் அவர் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து, பிரசாந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தடுக்க முயன்ற ராஜேந்திரன், அசோக் மற்றும் பிரசாந்த் ஆகியோரையும் அரிவாளால் தாக்கினார்.
இதில் அவர்களது கை, கால்களில் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே அச்சிறுவன் தப்பி ஓடினான். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அச்சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.---