/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய் இறந்த துக்கத்தில் 17 வயது மகன் தற்கொலை
/
தாய் இறந்த துக்கத்தில் 17 வயது மகன் தற்கொலை
ADDED : நவ 30, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: தாய் புற்றுநோயால் இறந்த துக்கத்தில், 17 வயது மகன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் ஜெசிக்கலா,38. இவருக்கு விவாகரத்தான நிலையில், காரமடை பகுதியில், எட்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். 17 வயது மகன் இருந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன் ஜெசிக்கலா புற்றுநோயால் இறந்தார்.
பள்ளிக்குச் சென்று வந்த அவரது மகன், படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தாய் இறந்ததால் மன வேதனையில் இருந்து வந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.