/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி
/
1,750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி
1,750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி
1,750 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி
ADDED : அக் 29, 2024 09:25 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட, 1,750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, வாகனங்களில் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று திருவள்ளுவர் திடல் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ரோடுகளில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது, பொருட்களோடு பொருட்களாக பதுக்கி பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, வாகனங்களை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தது கண்டறியப்பட்டது.
மொத்தம், மூன்று வாகனங்களில் இருந்து, 30 மூட்டைகளில், 1,750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினர்.