/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் 176 விநாயகர் சிலை பிரதிஷ்டை
/
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் 176 விநாயகர் சிலை பிரதிஷ்டை
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் 176 விநாயகர் சிலை பிரதிஷ்டை
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் 176 விநாயகர் சிலை பிரதிஷ்டை
ADDED : ஆக 28, 2025 05:53 AM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், 176 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் -10, இந்து முன்னணி 10, பா.ஜ., -2, சக்திசேனா -1, அகில பாரத மக்கள் கட்சி- 1, இந்து மக்கள் கட்சி -1 என, 25 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி 21, விஸ்வ ஹிந்து பரிஷத்- 2 பொதுமக்கள் -24 என, 47 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு- 5, பொதுமக்கள்- 5, இந்து முன்னணி- 2 என, 12 சிலைகள்; ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு -6, இந்து முன்னணி- 18, பா.ஜ., 2, இந்து மக்கள் கட்சி- 1, பொதுமக்கள்- 17 என, 44 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி- 19, பா.ஜ., -2, பொதுமக்கள்- 26, விஸ்வ ஹிந்து பரிஷத் 1 என, 48 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, நாளை (29ம் தேதி) விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.

