ADDED : ஏப் 17, 2025 10:30 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 17வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி, துணைத் தலைவர் லட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தனர். முதல்வர் மணிகண்டன், ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக, ஆர்.எல்.ஐ., இன்டர்நேஷனல் துணைத்தலைவர் ஜார்ஜ் சுந்தரராஜ் கலந்து கொண்டார். தவிர, 2024--25ம் ஆண்டின் சிறந்த மாணவியாக இ.சி.இ., துறையைச் சேர்ந்த ரித்திகா, சிறந்த மாணவராக சி.எஸ்.இ., துறை முகமது தவுபிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜா, மணிகண்டன், பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பொன்னம்பலம், பி.ஏ., சர்வதேச பள்ளி முதல்வர் மகேஷ் நாராயணன், பி.ஏ., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
