/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையை சுற்றிலும் கண்காணிக்க 182 சி.சி.டி.வி., கேமரா
/
அரசு மருத்துவமனையை சுற்றிலும் கண்காணிக்க 182 சி.சி.டி.வி., கேமரா
அரசு மருத்துவமனையை சுற்றிலும் கண்காணிக்க 182 சி.சி.டி.வி., கேமரா
அரசு மருத்துவமனையை சுற்றிலும் கண்காணிக்க 182 சி.சி.டி.வி., கேமரா
ADDED : அக் 16, 2024 10:54 PM

கோவை : கோவை அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி பொருத்தப்பட்டுள்ள 182 சி.சி.டி.வி., கேமராக்களை, நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்.
கோவை மாநகர போலீஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மருத்துவமனை வளாகம் மற்றும் வளாகத்தை சுற்றிலும், 182 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதில் போலீஸ் சார்பில் பிணவறை, நுழைவாயில், ரயில்நிலையம், எஸ்.பி., அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் வரை, மருத்துவமனையை சுற்றி கண்காணிக்கும் வகையில், 32 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், 150 கேமராாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு அறை மூலம் கேமரா பதிவுகள், ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் துவக்க விழா, நேற்று அரசு மருத்துவமனையில் நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் கணேசன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.