ADDED : ஏப் 08, 2026 06:19 AM

அ நிறம் | அளவு
கோவை: மதுக்கரை, பாலத்துறை எல் அண்டு டி பைபாஸ் சாலையின் அருகே அமைந்துள்ள கலைவாணி கல்வியியல் கல்லுாரியில் 18வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலெட்சுமி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். கல்லுாரியின் தாளாளர் கிருஷ்ணசாமி, இயக்குனர் குமாரசாமி, துணைத்தலைவர்கள் ரவிக்குமார், ராஜ்குமார், அறங்காவலர்கள் பிரியதர்ஷினி, நித்யா, முதல்வர் காளீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
