/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளியம்பட்டி தர்மசாஸ்தா கோயிலில் 18ம் படி பூஜை
/
புளியம்பட்டி தர்மசாஸ்தா கோயிலில் 18ம் படி பூஜை
ADDED : டிச 21, 2025 05:11 AM
அன்னூர்: புளியம்பட்டி, அய்யப்பன் கோயிலில் 18ம் படி திறப்பு நேற்று நடந்தது.
புளியம்பட்டி, நேரு நகரில், சித்தி விநாயகர், தர்மசாஸ்தா அய்யப்பன் கோயில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போலவே 18 படிகள் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை 18ம் படி திறக்கப்படுகிறது.
அதன்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கணபதி ஹோமமும் அய்யப்பனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. காலை 6:00 மணிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு 18ம் படி திறக்கப்பட்டது. அய்யப்ப பக்தர்கள் சரண கோஷத்தோடு 18ம் படி ஏறி அய்யப்பனை தரிசித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பனுக்கு, அலங்கார பூஜை நடந்தது.
மாலையில் பதினெட்டாம் படிக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, படி பூஜை நடந்தது. ஹரிவராசனம் பாடலுடன், நடை அடைக்கப்பட்டது.

