ADDED : ஏப் 02, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
சூலுார்: ஆவணங்களை சமர்ப்பித்த, 19 பேரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
சூலுார் சட்டசபை தொகுதியில், ஒரு ஷிப்டுக்கு, ஆறு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை நடந்த வாகன சோதனைகளில், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 63 லட்சத்து, 85 ஆயிரத்து 665 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஆம்னி பஸ்சில் கொண்டுவரப்பட்ட 33 ஜோடி தங்க கம்மல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த, 19 பேருக்கு, 16 லட்சத்து, 52 ஆயிரத்து 500 ரூபாயை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் திருப்பி வழங்கினர்.
