/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் 196 குழந்தைகள் பிறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பின்தங்கின
/
அரசு மருத்துவமனையில் 196 குழந்தைகள் பிறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பின்தங்கின
அரசு மருத்துவமனையில் 196 குழந்தைகள் பிறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பின்தங்கின
அரசு மருத்துவமனையில் 196 குழந்தைகள் பிறப்பு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பின்தங்கின
ADDED : ஜன 03, 2025 10:06 PM
வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறப்பு வெகுவாக குறைந்துள்ளது.
வால்பாறையில், வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர் ஆகிய மூன்று இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 38 இடங்களில் துணை சுகாதார நிலையமும் செயல்படுகின்றன.
இங்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது. இது தவிர, தாய், சேய் தங்குவதற்கு தனி அறையும் உள்ளது. கர்ப்பிணிகள் வசதிக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இதனால், ஆரம்ப காலத்தில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறப்பும் அதிகரித்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சுகாதார நிலையத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பிரசவம் நடக்கிறது.
வால்பாறை நகரில் உள்ள சுகாதார நிலையத்தில், கடந்தாண்டு, 13 குழந்தைகளும்; சோலையாறு நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 6 குழந்தைகளும் பிறந்துள்ளன. ஆனால், வால்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில், 196 குழந்தைகள் பிறந்துள்ளன.
வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் நித்யா கூறியதாவது:
கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 375பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். 15,822 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது.
மேலும், பிரசவ வார்டு தனியாக அமைந்துள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம், 196 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், 88 பெண்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மகப்பேறு பிரிவுக்கு தேசிய தரச்சான்றும், சிறந்த மருத்துவமனைக்கான மாநில சான்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.

