/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு வரும் 19, 20ல் போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு வரும் 19, 20ல் போட்டி
ADDED : பிப் 14, 2024 11:15 PM
பொள்ளாச்சி, -கோவை மண்டல அறிவியல் மையத்தில், அறிவியல் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறன் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுத்து போட்டிகள், ஓவியப் போட்டிகள், வரும், 19, 20 ஆகிய தேதிகளில், கொடிசியா அருகிலுள்ள மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில், பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை, 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கும், முன்பதிவுக்கும், 84385 48976 அல்லது 0422 -2963026 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் தினமான, வரும், 28ம் தேதி பரிசுகள் வழங்கப்படும் என, மாவட்ட அறிவியல் அலுவலர் வள்ளி தெரிவித்துள்ளார்.

