/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜூவல்லரி எமினென்ஸ் கீர்த்திலாலுக்கு 2 விருது
/
ஜூவல்லரி எமினென்ஸ் கீர்த்திலாலுக்கு 2 விருது
ADDED : ஜூலை 10, 2025 11:01 PM
கோவை; ஜூவல்லரி எமினென்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வு (ஜெ.இ.ஏ.,) ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. இதில், கோவை கீர்த்திலால் இரண்டு விருதுகளை வென்று பாரம்பரியத்தை பறைசாட்டியுள்ளது.
வண்ண வைரக்கற்கறால் பாரம்பரியம் மாறாமல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கீர்த்திலால் காதணி இரண்டு விருதுகளை வென்றுள்ளது. திரைப்பட நட்சத்திரம் ஷாசான்பதம்ஸி பங்கேற்று கீர்த்திலால்ஸ்க்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விருது வழங்கும் நிகழ்வில், கீர்த்திலால் வர்த்தக பிரிவு இயக்குனர் சூரஜ்சாந்தகுமார் கூறுகையில், '' மரபுசார்ந்த பாரம்பரிய நகை தயாரிப்பு திறனை நளின வடிவமைப்பு உத்திகளோடு நேர்த்தியாக இணைப்பதில் எங்களின் அர்ப்பணிக்கும், வெற்றிக்கும் சான்றாக இவ்விருது அமைந்துள்ளது. நவீனகாலத்திற்கு ஏற்றவாறு நளினத்தையும், அழகையும் மறுவரையறை செய்ய தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்,'' என்றார்.
மேலும், விருதுக்கு காரணமான கீர்த்திலால் குழும பணியாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.